தாவரங்கள் அதிகமான வெப்பநிலையை எவ்வாறு சமாளிக்கின்றன?
இந்த கேள்விக்கான விடையை மிச்சிகன் பல்கலைக்கழக தாவர இயல் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். ஜீன்களில் சிறைப்பட்டிருந்த இந்த ரகசியம் அண்மையில் விடுவிக்கப்பட்டிருக்கிறது. வெப்பமான உலர்ந்த காலநிலைகளில் தாவரங்களை வளர்த்தெடுக்கும் தொழில்நுட்பத்தை அறிய இந்த கண்டுபிடிப்பு நிச்சயம் உதவும்.
கடுகு குடும்பத்தைச்சேர்ந்த Arabidopsis thaliana தாவரத்தில் bZIP28 என்கிற ஜீன் வெப்பநிலைக்கு எதிர்வினையாற்றுகிறது என்பதை கண்டறிந்துள்ளனர். தாவரங்கள் அதிகவெப்பநிலையை தாங்கும் தன்மை ஒரு சிக்கலான நடைமுறையாகும். தாவரங்களில் புரதங்களை உருவாக்கி, செல்லிற்குள் வேதிப்பொருள்களை கடத்தும் பணியை endoplasmic reticulum என்னும் பகுதி செய்கிறது. இந்த பகுதியில் இருந்து வெளிப்படும் சைகைகளுக்கு bZIP28 ஜீன்கள் எதிர்வினையாற்றுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு செல்லில் காணப்படும் உட்கருவே செல்லின் மூளை என்று இதுநாள்வரையில் கருதப்பட்டு வந்தது. ஆனால் bZIP28 போன்ற ஜீன்கள் மற்றசில ஜீன்களை தூண்டிவிட்டு இயங்கச் செய்யவும், இயங்காமல் இருக்கச் செய்யவும் ஆற்றல் பெற்றவையாக இருக்கின்றன. இந்த வகையான ஜீன்கள் விலங்கு செல்களில் மட்டும் இருப்பதாக இதுவரை அறியப்பட்டிருந்தது. ஆனால் இப்போதுதான் தாவர செல்களிலும் இந்த வகையான ஜீன்கள் கண்டறியப்பட்டுள்ளன.
ஒரு தாவரம் அதிகவெப்பநிலையை எதிர்கொள்ளும்போது bZIP28 ஜீனின் ஒருமுனை துண்டிக்கப்படுகிறது. செல்லின் உட்கருவை நோக்கி நகரும் bZIP28 ஜீன், மற்ற ஜீன்களில் தூண்டுதலை ஏற்படுத்தி வெப்பநிலைக்கு எதிர்வினை செய்யுமாறு தூண்டிவிடுகின்றன.
அதே நேரத்தில் வெப்பநிலை ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல் அதிகமானால் bZIP28 ஜீன்கள் இறந்து போகின்றன.
இன்னும் படிக்க: "http://www.sciencedaily.com/releases/2008/10/081006180803.htm"
- மு.குருமூர்த்தி (cauverynagarwest@gmail.com)
Monday, November 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துரைகள்:
Post a Comment