இத்தாலி நாட்டைச் சேர்ந்த ரோக்க மோன்பியா என்றும் எரிமலையின் உச்சியில் 385,000 மற்றும் 325,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால மனிதரின் காலடித் தடங்களை கண்ட அறிவியலாளர்கள் இவை தான் மிகவும் பழமையான மனிதக் காலடித் தடங்கள் என்று உறுதிப் படுத்தியுள்ளார்கள்.
இந்த எரிமலையின் உச்சியில் கெட்டிப் பட்டுப் போன எரிமலைச் சாம்பலின் மீது இக் காலடிகளை பவோடா பல்கலைக் கழகத்தி லிருந்து 2003 ஆம் ஆண்டில் சென்ற ஒரு குழுவினர் கண்டனர். அக் காலடித் தடங்கள் 385,000 ஆண்டுகளிலிருந்து 325,000 ஆண்டு கள் முந்தையவையாக இருக்கக்கூடும் என்று அப்போது மதிப்பிடப்பட்டது.
எரிமலையின் மேலிருந்து கீழே இறங்கி வந்த மூன்று பழங்கால மனிதர்களின் இக்காலடித் தடங்கள் சரியாக எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பதை தற்போது ஒரு பிரஞ்சுக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது பற்றி நியூ சயின்ஸ் இதழில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
தட்பவெப்பம் மற்றும் சுற்றுச் சூழல் அறிவியல் சோதனை சாலையின் அறிவியலார் கள் ஸ்டீபன் ஸ்கெயிலட் தலைமையில் இக்காலடித் தடங்களின் காலத்தைக் கண்டறிய ஆர்கனைப் பயன்படுத்தினர்.
இக்காலடித் தடங்களை முதன் முதலாகக் கண்டு உலகிற்கு அறிவித்த இத்தாலியக் குழுவைச் சேர்ந்த பாலோ மியட்டோ என்பவர், இதுவரை காணப்பட்ட மனிதக் காலடித் தடங்களிலேயே இதுதான் மிகவும் பழமை யானது என்பதை அழுத்தமாகப் பதிந்துள்ள இக் காலடித் தளங்கள் உறுதிப்படுத்துகின்றன என்று கூறுகிறார். இந்தப் புதிய கண்டுபிடிப்பின் மூலம் இக் காலடித் தடங்கள் ஹோமோ ஹெய்டல்பெர்கென்சிஸ் மக்களு டையவை என்று தெரிய வருவதாக அவர் கூறுகிறார்.
அந்த இடத்திலிருந்து மூன்று கி.மீ. தள்ளி ஒரு இரண்டாவது ஆய்வு இடத் தைத் தோண்டி ஆராய்ச்சி செய்ய இத்தாலியக் குழு முடிவு செய்துள்ளது. பழங்கால மனிதர்கள் உபயோகித்த பாதையைக் கண்டு பிடிக்க இந்தப் புதிய அகழாய்வு பயன்படும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
காலடித் தடங்களின் தன்மையைக் காணும்போது அவர்கள் நடந்துதான் சென்றிருக்க வேண்டும், ஓடியிருக்க முடியாது என்று மியட்டோ கூறுகிறார். இந்த காலடித் தடங்கள் இரண்டு திசை களிலும் காணப்படுகின்றன. எனவே எரிமலை வெடித்ததால் அவர்கள் ஓடிச் சென்றிருக்க முடியாது; எரிமலை வெடித்ததற்குப் பிந்தைய காலத்தில் அத்தடங்கள் பதிந்திருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
"பூமி மற்றும் கோள்கள் அறிவியல் கடிதங்கள்" என்னும் பத்திரிகையில் இக் கண்டுபிடிப்புகள் வெளியிடப் பட்டுள்ளன.
-இளங்கண்ணன்
0 கருத்துரைகள்:
Post a Comment