
பெங்களூரு, ஜூலை 29_-உலக அளவில் பரபரப்-பாக பேசப்பட்ட சூரிய கிரகணத்தின் மொத்த ஒளிப்படங்களையும் சந்திரயான் 1 செயற்கைக் கோள், சிறப்பு ஒளிப்படக் கருவிகள் மூலம் படம்-பிடித்து பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்தியாவின் சந்திர-யான் 1 செயற்கைக் கோள், சந்திரனின் சுற்றுப் பாதை-யில் சென்று கொண்டிருக்கிறது. அது ஜூலை 22 ஆம் தேதி-யன்று நிகழ்ந்த சூரிய கிரகணத்தைச் சிறப்பாகப் படம் பிடித்து ஒளிப்-படங்களை அனுப்பி வைத்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரோ இயக்குநர் சதீஷ் கூறியதாவது:- சூரிய கிரகணத்தின் ஒட்டு மொத்த ஒளிப்படங்-களையும் சந்திரயான் படம் பிடித்து அனுப்பி வைத்துள்ளது. கடந்த 22 ஆம் தேதி நிகழ்ந்த சூரிய கிரகணத்தில், வட கிழக்கு சீனா முதல் வடக்கு ஆஸ்திரேலியா வரை சூரிய நிழல் மறைக்-கப்பட்டிருந்ததை இது படம் பிடித்து அனுப்பி வைத்துள்ளது. மிகவும் நேர்த்தியாக படம் பிடிக்-கப்பட்டுள்ள இந்த ஒளிப்-படங்கள் பல்வேறு ஆய்வுகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இந்த ஒளிப்படங்கள் பெங்களூருவில் உள்ள பைலாலு வானியல் ஆய்வு மய்யத்துக்கு கிடைத்து உள்ளன. இதன் மூலம் சந்தி-ரயான் தனது சுற்றுப் பாதையில் திருப்-தி-கரமாக செயல்பட்டு வருவதையும் உறுதி செய்ய முடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி:விடுதலை
2 கருத்துரைகள்:
Nalla seithi
அன்பு தோழருக்கு வணக்கம்.
இன்றுதான் எதேச்சையாக உங்களின் வலைப்பூவை சந்திக்க நேர்ந்தது. அருமையான அறிவியல் பதிவுகள். மேலும் தொடருங்கள் என்று வாழ்த்துகிறேன்.
சந்திராயனை நினைத்து மகிழ்ந்துக் கொண்டு இருந்த வேளையில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது வருந்தக் கூடியது. ஒருவேளை பூஜை புனஸ்காரங்களில் ஏதாவது குறை வைத்துவிட்டார்களோ? அமரர் MGR அவர்களின் 'எங்கள் தங்கம்' பட கதகாலட்சப பாடல் தான் ஞாபகத்திற்கு வருகிறது!
Post a Comment