Tuesday, November 11, 2008

மயக்கம் ஏற்படுவது எதனால்?

சாதாரணமாக ஒருவருக்கு மயக்கம் ஏற்படுகிறது என்றால், அதற்கு பல காரணங்கள் உள்ளன. மயக்கம் அல்லது கிறுகிறுப்பானது மூளையின் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடையது.
மயக்கம் மற்றும் கிறுகிறுப்பு ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது எனலாம்.
வழக்கமான சூழலில் இருந்து உங்களை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்வது போன்றோ அல்லது தரையில் சாய்வது போன்றோ ஒருவிதமான பாதிப்பை இந்த கிறுகிறுப்பு ஏற்படுத்தலாம்.
தீவிரமான கிறுகிறுப்பே மயக்கம் எனலாம். பொதுவாக கிறுகிறுப்பு ஏற்பட்டவுடனேயே கேட்புத் திறன் குறையும். அதுபோன்ற ஒரு நிலையில், நம்மைச் சுற்றியுள்ள பொருட்களும், நாமும் சுற்றுவது போன்ற பிரமை உருவாகும். பார்வை மங்கலாகி, சில நேரங்களில் வாந்தி, மயக்கம் ஏற்படுவதுடன் தரையில் விழவும் நேரிடலாம்.
வேறு சிலருக்கு கண்கள் துடிக்கக்கூடும். இது சில மணிநேரம், சில நாட்கள் அல்லது சில வாரங்கள் வரைகூட நீடிக்கக்கூடும்.
நரம்பு மண்டலத்தில் இருந்து, உட்புறக்காதில் ஏற்படக்கூடிய பாதிப்பினாலேயே மயக்கம் ஏற்படுவதாகத் தெரிய வந்துள்ளது. உடலின் உணவு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு, காதில் கேட்கும் திறனை பாதிப்படையச் செய்வதாலேயே இந்த நிலை உருவாகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
நரம்பு மண்டலப் பாதிப்புகளினாலேயே மயக்கம் ஏற்படக்கூடும் என்றாலும், கழுத்தில் அடிபடுதல், வலிப்பு உள்ளிட்ட காரணங்களினாலும் கிறுகிறுப்பு ஏற்பட வாய்ப்புண்டு. மூளைக் கட்டி, நியூரோமா எனப்படும் நரம்பு பாதிப்பினாலும் மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.
எந்த வகையில் மயக்கம் ஏற்பட்டாலும், அதற்குரிய சிகிச்சையை உங்களின் குடும்ப மருத்துவரின் உதவியுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ற சரியான சிகிச்சையைப் பெறுதல் அவசியம். .

http://files.periyar.org.in/viduthalai/20081110/news18.html

குடல் புண்

நுண்கிருமி வயிற்றுப் புண் ணுக்கான முக்கிய காரணம். இது அசுத்த உணவு களால் பரவவது.

பொறாமை, விரக்தி, வெறுப்பு, குற்ற உணர்வு, தனிமை உணர்வு, ஆவேசம், பதட்டம் போன்ற உணர்வுகள் குடல் புண்ணை அதிகரிக்கின்றன.

மன அழுத்தத்தின்போது இரைப்பையில் அதிகமான அமிலம் சுரக்கிறது. அதனால் குடல்புண் பெரிதாகிறது அல்லது தாமதமாக குணமாகிறது.

குடல் புண்ணால் பாதிக்கப்படுபவர்களின் உற வினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு இரண்டு மடங்கு கூடுதலாக குடல் புண்ணுக்கு ஆளாகிறார்கள்.

குடல்புண் ஒரு குண்டூசியின் தலை அளவிலிருந்து இரண்டரை செ.மீ. விட்டம் கொண்ட அளவு வரை தோன் றும். இவை பெரிதாக இருந்தால், இரைப் பையில் அடைப்பு ஏற்படும்பொழுது உணவு வயிற்றுக்குக் கீழே செல்லாது.

இப்புண் இரைப் பையை துளைத்தோ அல்லது முன்சிறுகடல் பகுதியைத் துளைத்தோ ஓட்டையை ஏற்படுத் தும். இதற்கு உடனே அறுவை சிகிச்சை தேவை.

குறிப்பாக தொடர்ந்து மது அருந்துவதோ, வலி மாத்திரை, மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளை சாப் பிடுவோருக்கு இப்பிரச்சினை அதிகமாக ஏற்படும்.

வயிற்றுப்புண் சில சமயங்களில் புற்றுநோயாக மாறுவதுண்டு. இதைத் தொடக்கத்திலேயே கண் டறிந்து அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.

அறிகுறிகள்:

நெஞ்சில் எரிச்சல், அனல் கக்குவது போன்ற உணர்வு, வயிற்றில் தோன்றும் வலி, வயிற்றுப் புண்ணுக்கும் உணவுக்கும் தொடர்பு, உணவிற்கும் வலிக்கும் உள்ள தொடர்புகளில் குடல்புண் வித்தி யாசப்படும், இரைப்பையில் புண்ணிருந்தால் உணவு சாப்பிட்டதும் வலி அதிகமாகும். இரைப்பையை அடுத்த டியோடினம் என்ற முன்குடலில் புண்ணி ருந்தால் உணவு சாப்பிட்டதும் வலி குறைந்துவிடும்.

உணவு முறைகள்:

1. திரவ உணவுகளான கஞ்சி, பால், குளிர்ந்த நீர், இளநீர், புளிப்பில்லாத பழரசம்.

2. ஹார்லிக்ஸ், நன்றாக வேக வைத்த சாதம், கஞ்சி, மோர்சாதம், இட்லி

3. கீரைகள், காய்கறிகள், பருப்பு வகைகள் (நன்கு வேக வைத்தது)

4. புளிப்பில்லாத பழங்கள்: ஆப்பிள், வெள்ளரிப்பழம், முலாம் பழம்.

5. உணவு வேளைகளுக்கு இடையில் (பகல் 11 மணி மாலை 4 மணி) மேரி பிஸ்கட், இளநீர், பால், மோர், பாயாசம் போன்றவைகளைச் சாப்பிடலாம்.

நெஞ்சுகரிப்பு உள்ளவர்கள்:

1. இவர்களுக்கு வயிற்றின் மேல்பகுதியில் வலி, வயிறு உப்புசம், நெஞ்சு கரிப்பு, புளிச்ச ஏப்பம், வாந்தி, இரத்த வாந்தி, கருப்பு நிறமாக மலம் கழித்தல், பசியின்மை, காரம் சாப்பிட்டால் எரிச்சல், நள்ளிரவுக்கு மேல் வயிற்று வலி மற்றும் பசிஉணர்வு போன்ற அறிகுறிகள் அதிக மாக இருக்கும்.

உணவுப்பாதை அசைவு பிரச்சனை நெஞ்சுரித்தரித் தலுக்கு மிகவும் முக்கிய காரணங்களாகும். இதனால் ஏப்பம், வயிறு நிறைந்த உணர்வு போன்ற அறிகுறிகள் உண்டாகும். உணவுக் குழாய்க்கு அடியிலுள்ள வால்வு/தசை பலவீனமுற்றிருக்கலாம் அல்லது சரியாக வேலை செய்யாதிருக்கலாம். அதனால் அமிலம் மற்றும் உணவுகளை உணவுப்பாதையின் மேல் நோக்கி எதிர்த்து வரும்.

படுக்கையின் தலைப்பாகத்தை உயர்த்தி வைக்கவும். இதனால் புவிமையம் உணவை கீழ்வயிற்றில் இருக்கச் செல்ல உதவும். அதிக எடையிருப்பின் எடையை குறைக்கவும். இது உணவுக் குழாயின் அடிப்பாகத்திலுள்ள தசை வலுவை மேம்படுத்த உதவும். சிலருக்கு உணவை வயிற்றினுள் அனுப்ப உணவுக் குழாய்க்கு சிரமமாய் இருக்கலாம். வயிற்றைக் காலி செய்ய வழக்கமான நேரத்தைவிட அதிக நேரம் எடுக்கலாம்.

மருந்து வகைகள்: ஆண்டாசிட், ரேனிடின், டாம் பெரிடோன், ஒமிபிரசோல், பிஸ்மத் போன்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப் படி பயன்படுத்தலாம். ஹெச்.பை லோரி கிருமிக்கு ஒருவார ஆண்டிபயாடிக் சிகிச்சை தேவை.

நன்றி: விடுதலை

Monday, November 10, 2008

இரத்தத்தை தூய்மையாக்க ஒரு கருவி


Blood cleaning
தொற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர். டயாலிசிஸ் கருவியைப் போன்றது இது. மெல்லிய இழைகளின் துணைகொண்டு இரத்தத்தில் உள்ள வைரஸ்களை இந்த கருவி வடிகட்டிவிடுகிறது. இரத்தக்குழாயில் இருந்து குழாய்வழியாக இரத்தம் இந்தக் கருவிக்குள் செல்கிறது. சுத்தம் செய்யப்பட்ட இரத்தம் மீண்டும் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. எண்ணற்ற நோய்கள் இந்தக் கருவியினால் குணப்படுத்தப்படுகின்றன.

நாளொன்றுக்கு 14,000 பேர் எச்.ஐ.வி. வைரஸ்களால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தக் கருவியினால் எய்ட்ஸ் நோயாளிகளின் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, நீடித்த ஆயுளுக்கு வழிபிறந்துள்ளது. சாண்டிகோவின் யேத்லான் மருத்துவமனை தலைவர் ஜிம் ஜோய்ஸ் கூறும்போது இந்த கருவி ஒரு டயாலிசிஸ் கருவியைப்போல் செயல்படுவதாக கூறியுள்ளார்.

உடலில் உள்ள அனைத்து இரத்தமும் இந்தக் கருவியில் உள்ள பெட்டகத்தின் வழியாக எட்டு நிமிடத்திற்கொருமுறை செலுத்தப்படுகிறது. இரத்தத்தில் உள்ள அனைத்து வைரஸ்களும் சிலமணி நேரங்களுக்குள் நீக்கப்படுகின்றன. எச் ஐ வி, ஹெபடிடிஸ்-சி, தட்டம்மை, ஃப்ளூ ஆகிய வைரஸ்கள் எளிதில் நீக்கப்பட்டுவிடுகின்றன. பெரிய அளவிலான இந்தக் கருவியை மருத்துவமனையிலும், சிறிய அளவிலான கருவியை அவசரகால ஊர்திகளிலும் பயன்படுத்த முடியுமாம். தீவிரவாதிகளினால் ஏவப்படும் வைரஸ்களில் இருந்து உயிர்காக்கவும் கூட இந்தக் கருவி பயன்படுகிறது.

சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கு டயாலிசிஸ் செய்யப்படுகிறது. உடலில் உள்ள இரத்தம் அனைத்தும் செயற்கை சிறுநீரகம் வழியாக செலுத்தப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. டயாலிசிஸ் என்பது உயிரை தக்கவைப்பதற்கான சிகிச்சை மட்டும்தான். நோயில் இருந்து விடுதலை அளிப்பதற்கான சிகிச்சையல்ல. வலிநிறைந்ததும் செலவு பிடிப்பதுமான டயாலிசிஸ் சிகிச்சை இப்போது நிறைய பேருக்குத் தேவைப்படுகிறது. இரத்தம் சுத்தப்படுத்தும் கருவியும் டயாலிசிஸ் கருவியைப் போன்றது தான்.

அதிக செலவு பிடிப்பது. இனிமேல் பணக்காரர்களுக்கு வைரஸ்களிடமிருந்து விடுதலை.

http://www.sciencedaily.com/videos/2008/0602-cleaning_infected_blood.htm

http://www.keetru.com/medical/general/blood.php
- மு.குருமூர்த்தி, (cauverynagarwest@gmail.com)

தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்த தியாகி சங்கரலிங்கனார்-

விருதுநகரில் உள்ள தேசபந்து மைதானத்தில் நம் மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தவர் தியாகி சங்கரலிங்கனார்.

ஆந்திர மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பொட்டி ஸ்ரீராமலு 1952 டிசம்பர் 15 அன்று உயிர் துறந்தார். இதையடுத்து ஆந்திர மாநிலம் உருவெடுத்தது. சங்கரலிங்கத்துக்கு இது ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியது. விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கம் காந்தியுடன் தண்டி யாத்திரையிலும் கலந்து கொண்டார். தன்னுடைய சொத்துக்களை அருகிலுள்ள பள்ளிக்கு எழுதி வைத்து விட்டார். விருதுநகரில் ஒரு ஆசிரமத்தை அமைத்து தங்கியிருந்த போதுதான் ஸ்ரீராமலுவின் உண்ணாவிரதம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் தமிழ்நாடு பெயர் சூட்டுவதற்காகப் போராட்டம் நடத்தியதின் தூண்டுதலிலும் சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் போன்ற 12 கோரிக்கைகளை முன்வைத்து 1956 ஜூலை 27 ல் தனியாளாக சங்கரலிங்கனார் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

காங்கிரஸ் அரசு அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. ம.பொ.சி., அண்ணா, காமராஜர், ஜீவா போன்றவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட வலியுறுத்தினர். ஆனால் தன்னுடைய கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்து விட்டார். தொடர்ந்து 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்த சங்கரலிங்கனார் அக்டோபர் 10 ம் தேதி உயிர் துறந்தார்.

தொடர்ந்து அவரது கோரிக்கைக்காக பலரும் குரல் கொடுத்தனர். 1967 ஏப்ரம் 14 அன்று சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை தமிழக அரசு ஆக மாறியது. 1968 நவம்பர் 23 தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

தாவரங்களைக் காக்கும் ஜீன்கள்- மு.குருமூர்த்தி

தாவரங்கள் அதிகமான வெப்பநிலையை எவ்வாறு சமாளிக்கின்றன?

இந்த கேள்விக்கான விடையை மிச்சிகன் பல்கலைக்கழக தாவர இயல் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். ஜீன்களில் சிறைப்பட்டிருந்த இந்த ரகசியம் அண்மையில் விடுவிக்கப்பட்டிருக்கிறது. வெப்பமான உலர்ந்த காலநிலைகளில் தாவரங்களை வளர்த்தெடுக்கும் தொழில்நுட்பத்தை அறிய இந்த கண்டுபிடிப்பு நிச்சயம் உதவும்.

கடுகு குடும்பத்தைச்சேர்ந்த Arabidopsis thaliana தாவரத்தில் bZIP28 என்கிற ஜீன் வெப்பநிலைக்கு எதிர்வினையாற்றுகிறது என்பதை கண்டறிந்துள்ளனர். தாவரங்கள் அதிகவெப்பநிலையை தாங்கும் தன்மை ஒரு சிக்கலான நடைமுறையாகும். தாவரங்களில் புரதங்களை உருவாக்கி, செல்லிற்குள் வேதிப்பொருள்களை கடத்தும் பணியை endoplasmic reticulum என்னும் பகுதி செய்கிறது. இந்த பகுதியில் இருந்து வெளிப்படும் சைகைகளுக்கு bZIP28 ஜீன்கள் எதிர்வினையாற்றுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு செல்லில் காணப்படும் உட்கருவே செல்லின் மூளை என்று இதுநாள்வரையில் கருதப்பட்டு வந்தது. ஆனால் bZIP28 போன்ற ஜீன்கள் மற்றசில ஜீன்களை தூண்டிவிட்டு இயங்கச் செய்யவும், இயங்காமல் இருக்கச் செய்யவும் ஆற்றல் பெற்றவையாக இருக்கின்றன. இந்த வகையான ஜீன்கள் விலங்கு செல்களில் மட்டும் இருப்பதாக இதுவரை அறியப்பட்டிருந்தது. ஆனால் இப்போதுதான் தாவர செல்களிலும் இந்த வகையான ஜீன்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஒரு தாவரம் அதிகவெப்பநிலையை எதிர்கொள்ளும்போது bZIP28 ஜீனின் ஒருமுனை துண்டிக்கப்படுகிறது. செல்லின் உட்கருவை நோக்கி நகரும் bZIP28 ஜீன், மற்ற ஜீன்களில் தூண்டுதலை ஏற்படுத்தி வெப்பநிலைக்கு எதிர்வினை செய்யுமாறு தூண்டிவிடுகின்றன.

அதே நேரத்தில் வெப்பநிலை ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல் அதிகமானால் bZIP28 ஜீன்கள் இறந்து போகின்றன.

இன்னும் படிக்க: "http://www.sciencedaily.com/releases/2008/10/081006180803.htm"

- மு.குருமூர்த்தி (cauverynagarwest@gmail.com)

Monday, October 13, 2008

எச்சரிக்கை! செல்பேசி- முல்லைத் தமிழ்

இன்றைய அறிவியல் உலகம் தகவல் தொடர்பு தொழில் நுட்பங்களின் மூலம் மிக உன்னதமான பிணைப்பை உலக மக்களிடையே எளிமையாக்கிவிட்டது.

கண்ணிமைக்கும் நேரத்தில் கடல் கடந்து பறக்கும் குரல் ஒலிகளின் ஒப்புயவர்வற்ற செயல்பாடுகளுக்கு செல்பேசி முக்கிய பங்காகிவிட்டது. காடுகள் மேடுகள் எல்லாம் உழைத்து களைத்துப்போன ஏழைமக்கள் வாழும் குடிசைப்பகுதிகளின் சந்து பொந்துகளிலெல்லாம் சந்தடியில்லாமல் நுழைந்து சாகசம் படைத்து அவர்தம் வாழ்க்கைத் தொடர்பை வலுவாக்கி வருவதும் செல்பேசிகளே. செல்போன்களின் சேவைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கின்றன. 2005 - ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகில் இதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 126 கோடியாக இருந்தது என்றும் அது, நாளொன்றுக்கு 46000 பேர் வீதம் புதிதாக அதிகரித்து வருவதாகவும் கணக்கிட்டுள்ளனர்.

இங்ஙனம் பரவிவரும் செல்பேசிகளின் பயன்பாடுகள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் கேடுகள் விளைவிக்கின்றன என்பதனை சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன. இயற்கையின் இயற்கையான கதிர்வீச்சுகளிடையே அறிவியல் கண்டுபிடிப்புகளாகிய ஒயர்லெஸ், ரேடியோ, டிவி, ரேடார், செல்போன்கள் இவைகளின் இயக்கத்தால் வெளிவிடப்படும் ரேடியோ அலைகள், கதிரியக்க அதிர்வுகள், நுண்ணலை அதிர்வுகள், நுண்ணலை கதிர்வீச்சுகள் போன்றவை உயிர்களின் மீது பல்வேறு தீயவிளைவுகளை உருவாக்கி வருகின்றன. இதில் இன்றைய செல்பேசிகளே அபரிமிதமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதனை அறிய முடிகிறது.

இதுபோலவே செல்பேசி "டவர்களும்" மிகவும் ஆபத்தானவை தான். அவற்றிலிருந்து வரும் பாதுகாப்பற்ற நுண்ணலை கதிர்வீச்சுகளில் சுமார் 60%, தலைப்பகுதிகளில் கிரகிக்கப்பட்டு, கொஞ்சம் மூளையினுள் ஊடுருவி செல்வதாக கண்டறிந்துள்ளனர்.

சிறுகுழந்தைகள் செல்பேசிகளை பயன்படுத்துவது மிகவும் பாதிப்பான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதனையும் பிரிட்டீஷ் தேசிய கதிரியக்க பாதுகாப்புக்கழகம் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளது. பெரியவர்களைவிட குழந்தைகளை 3.3 மடங்கு கதிர்வீச்சுகள் அதிகமாக பாதிக்கின்றன என்றும், குழந்தைகளின் மண்டைஓடுகள் மிகவும் மெல்லிய தன்மையுடையதாக இருப்பதால் அவை ஆபத்தான கதிர்வீச்சுகளினால் எளிதாக பாதிக்கப்படுவதால் 30 முதல் 40 வயதிற்குள் பெரும்பாலோருக்கு மூளைக்கட்டிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் உறுதிபடுத்தியுள்ளனர்.

செல்பேசிகளின் தீயவிளைவுகள் பற்றி பல்வேறு நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களின் தீவிர ஆய்வுகளில் பல உண்மைகள் வெளியாகி உள்ளன.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த "ராப்பாபோல்ட் மருத்துவ அறிஞர்கள் அமைப்பு" செல்பேசி கதிர்வீச்சுகளை விலங்குகளில் பரிசோதனை செய்ததில் அவற்றின் கண்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர். கண்களுக்கு அருகில் செல்பேசி கதிர்வீச்சு செல்லும்போது வெப்பநிலை சுமார் 3டிகிரி செல்சியஸ் அதிகரிப்பதால் கண்புரை நோய்கள் எளிதில் (Cataract) உருவாவதனை கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்க அறிவியலறிஞர்கள் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளின்படி செல்பேசி பயன்படுத்துபவர்கள் பெரும்பாலோர் ஆண்மைக்குறைவு, விந்தணுக்குறைவு, மகப்பேறின்மை போன்ற ஆபத்திற்குள்ளாவதை கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவில் மும்பையைச் சேர்ந்த மருத்துவ அறிஞர்களும் பல்வேறு ஆய்வுகள் மூலம் இதை தெளிவுபடுத்தியுள்ளனர். சாதாரணமான மனிதர்களைவிட நாள்தோறும் குறைந்தபட்சம் நான்கு மணிநேரம் செல்பேசிகளை பயன்படுத்துவோரின் விந்தணு எண்ணிக்கை 25% குறைவாகவே காணப்படுவதனை அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன.

அமெரிக்க ஓஹியோவின், கிளீவ்லேண்ட் இனப்பெருக்க மருத்துவ ஆய்வு மையத்தின் இயக்குநர் பேராசிரியர் அசோக் அகர்வால் விலங்கினங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி விந்தணுக்களை உருவாக்கும் செல்கள் மின்காந்த கதிர்வீச்சுகளினால் அல்லது அதனால் ஏற்படுத்தப்படும் வெப்பத்தினால் பாதிக்கப்படுவதனை கண்டறிந்து வெளியிட்டார். செல்பேசிகளை இடுப்பு பகுதியில் வைத்திருப்பவர்களின் அடிவயிறு, தொடையிணைப்பு பகுதிகள் எளிதில் சூடாவதும் இத்தகைய பாதிப்புகளுக்கு காரணமாகும்.

அன்னாள் நரம்பியல் ஆய்வுகளும், டாக்டர் பாவ்லோ ரோஷினியின் ஆய்வுகளும் செல்பேசி கதிர்வீச்சுகள் மூளைசெல்களை தூண்டுகின்றன என்பதனை வெளிப்படுத்தியுள்ளன. இத்தகைய தூண்டுதல்கள் காக்கைவலிப்பு போன்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார்.

சுவீடன் தேசிய உழைப்பாளர் வாழ்வு மையம் வெளியிட்டுள்ள ஆய்வாளர்களின் அறிக்கையின் படி 2000 மணி நேரத்துக்கு மேல் செல்பேசியை பயன்படுத்திய 905 முதியவர்கள் மூளைப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதனை வெளிப்படுத்தியுள்ளனர். சாதாரணமாக செல்பேசி பயன்படுத்தாதவர்களை விட 3.7 மடங்கு அதிகமாக செல்பேசி பயன்படுத்துவோர் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் ஒப்பிட்டுள்ளனர்.

இலண்டன் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் - மூன்று பிரிட்டிஷ் பல்கலை கழகங்களுடன் சேர்ந்து நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் படி அதிக செல்பேசி பயன்பாடு உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதை கண்டறிந்துள்ளனர்.

எனவே செல்பேசி பயன்படுத்துவோர் குழந்தைகளிடம் செல்பேசிகளை கொடுப்பதை தவிர்க்கவும்.

செல்பேசி வைத்திருப்போர் கவனத்திற்கு :

பேசும்போது உடலுக்கு சற்று தொலைவில் வைத்து பேசுவதும், வாய்ப்புகள் உள்ளபோது சாதாரண தொலைபேசிகளை பயன்படுத்துவதும். வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக செல்பேசி தொடர்புகளை தவிர்ப்பதும், அதிகமாக சூடாகும் வரை பேசுவதை தவிர்ப்பதும். செல்பேசி பயன்படுத்துபவருக்கு மிகவும் பாதுகாப்பானதாகும்.

http://www.keetru.com/puthiyathendral/aug07/mullai_thamizh.php

உயிர்-ஆங்கிலமூலம்: ஆபிரகாம்.தொ.கோவூர் / தமிழாக்கம்: தமிழநம்பி

பல்வேறு மதங்களின் துய்த(புனித) நூல்களை இயற்றிய எழுத்தாளர்கள், புடவி(universe)யின் உண்மையான இயல்பு பற்றிய அறிவைப் பெற்றிருக்கவில்லை. அவர்களனைவருமே இவ்வுலகம் தட்டையானதென்றும் புடவியின் நடுவாக உள்ளதென்றும் நினைத்தார்கள். இவ்வுலகம் உருண்டையானதென்று கூறிய முதல் ஆளான, கியார்டானோ புரூனோ, உரோமன் கத்தோலிக்கத் திருச்சவையால் எரிக்கப்பட்டு இறந்தார்.

உலகம் இடம்பெயரா நிலையினதென்றும் கதிரவக்கோளே இவ்வுலகைச் சுற்றிக்கொண்டிருக்கிறது என்றும் கூறும் கிறித்தவ மத நூலான ‘பைபிள்’ கருத்துக்களை எதிர்த்த 'குற்ற'த்திற்காகக் கலீலியோ கத்தோலிக்கத் திருச்சவையால் சிறைக்கனுப்பப்பட்டார்.

புடவியைப் பற்றிய இன்றைய நம் அறிவனைத்தும் வானியலரின் அறிவியல் ஆராய்ச்சிகளால் பெற்றவையேயன்றி, மத நூல்களிலிருந்து பெற்றவை அல்ல. இவ்வுலகம் மற்றைய கதிரவக் கோள்களைப் போலவே நானூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர், விண்வெளித் துகள்களின் தொகுப்புத் திரண்மையால் உருவானதென்று வானியலர் கருதுகின்றனர். பின்னர், இவ்வுலகின் வெதண(temperature) வளிப்புரிய(atmospheric) நிலைகள் பொருத்தமானவையாக அமைந்தபோது வேதியல் வினைப்பாடுகளின் விளைவால் உயிர்த் தோற்றம் ஏற்பட்டது.

எரிமலை மற்றும் கதிரவ ஆற்றல்களின் தாக்கத்துடன், உலகின் மிகத்தொன்மையான வளிப்புரிய நிலையில் சதுப்புவளி(methane), குருவளி (ammonia), நீர் ஆகியவற்றிலிருந்து உயிர்க்கக்கூடிய உயிர்மப்பொருளின் (livable organic matter) மூலக்கூறுகள் உருவாயின. (நோபல் பரிசு பெற்ற முனைவர் அர்கோபிந்து கொரானாவும் முனைவர் சிரில் பொன்னம்பெருமாவும், உலகின் மிகத்தொன்மையான வளிப்புரிய நிலைகளை, அவர்களின் ஆய்வறைகளில் செயற்கையாக ஏற்படுத்தி உயிர்வாழக்கூடிய உயிர்மப்பொருளின் மூலக்கூறுகளை உண்டாக்குவதில் வெற்றி கண்டுள்ளனர்)

இம்மூலக்கூறுகள் காலப்போக்கில் மறுபகர்ப்புறவும், மெள்ள சேர்மவுயிரகவாக்கம் (slow oxidation) என்கின்ற மூச்சுயிர்ப்பு (respiration) மூலம் ஆற்றலை உண்டாக்கவுமான பண்புகளை வளர்த்துக் கொண்டன. மூச்சுயிர்க்கின்ற உயிர்மப்பொருள் உண்டாக்கிய இவ்வகை ஆற்றலையே நாம் உயிர் என்கின்றோம். மூச்சுயிர்த்துக் கொண்டு, உயிர்ப்பாற்றலை (vital energy) உருவாக்குகின்ற பொழுது உயிர்மப்பொருள் உயிரியாக (உயிர்வாழ்கின்ற ஒன்றாக) ஆகி விடுகின்றது.

மிகத் தொன்மைக் காலத்தில், நிலத்தில் உருவாகிய உயிர்மப் பொருளின் (organic matter) மூலக்கூறுகள் காலப்போக்கில் ஒற்றைக்கல உயிரிகளை (unicellular organisms) உருவாக்கின. இவையே, பல இலக்கக்கணக்கான ஆண்டுப் படிநிலை வளர்ச்சியின் விளைவாக, இன்றைய மரவடை மாவடை(flora and fauna)களைத் தந்துள்ளன.

புகழ்பெற்ற வான்பூதியலர் (astrophysicist) ஆர்லொ சேப்ளி, உயிர்கள் இருக்கக்கூடிய பல இலக்கக்கணக்கான கோள்கள் விண்வெளியில் இருக்கக்கூடும் என்று கூறுகின்றார். இக்கோள்களுள் சிலவற்றில், மாந்தனை விடப் படிநிலைவளர்ச்சியிலும் அறிவுத்திறத்திலும் மிகுந்த வளர்ச்சி பெற்ற உயிரிகள் இருக்கலாமெனவும் சொல்லுகின்றார். சில வான்பூதியலர், இவ்வுலகை அடைந்த எரிகற்கள் மற்றும் வால்விண்மீன்களின் வழியாக உயிர்க்கக்கூடிய உயிர்மப்பொருளின் மூலக்கூறுகள் இங்கு வந்தனவென்று கருதுகின்றனர்.

நிலவில் உள்ள நிலைமைகள் உயிர்நிலைப்புக்கு ஏற்பேய்வு இல்லாமை காரணமாக, நிலவிற்குச் சென்ற விண்செலவர்(astronauts), உயிரின் விளைவாக்கத்திற்குத் தேவையான கீழ்க்காணும் மூன்று பொருள்களையும் அவர்களுடன் எடுத்துச் சென்றனர். அம்மூன்று பொருள்கள்: 1. உயிர்க்கக் கூடிய பொருள் [புரத்துப்பயினம்(proteinic protoplasm)] 2. உணவு, நீர் வடிவில் உணவூட்டம் 3. உயிர்வளி(oxygen).

இம்மூன்றனுள் முதலாவதை அவர்கள் தங்கள் உடல்களிலும், மற்ற இரண்டையும் கொள்கலன்களிலும் எடுத்துச் சென்றனர். இவ்வுயிராக்கப் பொருள்களில் எதிலேனும் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தால் அவர்கள் இவ்வுலகிற்கு உயிருடன் திரும்பியிருக்க மாட்டார்கள்.

உயிரிகளின் கலன்(cell)களில் காணப்படும் இனிகம்(glucose), கொழுப்புகள், புரத்தம் போலும் ஊட்டமளிக்கும் பொருள்களின் மெள்ள சேர்ம வுயிரகமாக்கம் (மூச்சுயிர்ப்பு) உண்டாக்கும் ஆற்றலின் வடிவமே உயிர்! அது, உயிரிகளின் கண்ணறை எனப்படும் கலன்களில் (cells) நடக்கும் வேதிய எதிர்வினைகளின் விளைவாகும். இந்த, உயிர் உண்டாக்கும் மூச்சுயிர்ப்பு, மெழுகுத்திரி போல் எரிபொருளை எரிப்பது போன்றதிலிருந்து எவ்வகையிலும் வேறுபட்டது இல்லை. வேதிய எதிர்வினைகளின் வேகத்தில் மட்டுமே இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது.

ஓர் உயிரியின் உடலில் நிகழும் சேர்ம வுயிரகமாக்கம், எரிபொருள் எரிந்துகொண்டிருக்கின்ற வேகத்தில் நடைபெறுமானால், அதனால் ஏற்படும் உயர்வெதணம்(high temperature) உயிர்க்கக்கூடிய பொருளை அழித்துவிடும். மெழுகுப்பொருள் வேதியச்சிதைவு உறாதவரையில் அதைப் பலதடவைகள் எரியவிடவும் அவிக்கவும் செய்யலாம். அதைப்போன்றே, ஓர் உயிரின் உடலிலுள்ள புரத்துப்பயினீர்(protoplasm) சிதைவுறாமலிருந்தால் இறந்த உடலைச் செயற்கை வழிகளால் பலமுறை உயிர்பெறச் செய்ய முடியும்.

1963இல் அமெரிக்கத் திரைப்பட நடிகர் பீட்டர் செல்லர்சு ஏழுமுறைகள் இறந்தார். ஒவ்வொரு முறையும் மின்துகளிய நெஞ்சவியக்கியைப் (electronic pacemaker) பயன்படுத்தி உயிர்த்தெழுப்பப்பட்டார். ஏழாவது மறுவுயிர்ப்பின் பிறகு, அவர் மேலும் பல படங்களில் நடித்தது மட்டுமின்றி மேலும் இரு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார். அவிக்கப்பட்ட ஒரு மெழுகுத்திரியை மீண்டும் எரியவிடும் நிகழ்ச்சியில், அவிக்கப்பட்டபோது மெழுகுத்திரியின் சுடர் விலகிப் போனதாகவும் மீண்டும் அதை எரிய விட்டபோது, அச்சுடர் திரும்பி வந்ததாகவும் நாம் சொல்லுவதில்லை.

அதைப்போலவே, பீட்டர் செல்லர்சு இறந்த ஒவ்வொரு முறையும் அவருடைய உடலைவிட்டு உயிர் பிரிந்தது என்பதும் பின்னர் உயிர்ப்பிப்பின் போது, அவ்வுடலுக்குத் திரும்பி வந்தது என்பதும் பொருளற்ற உரைகளே!

- தமிழநம்பி
(thamizhanambi44@gmail.com)
http://www.keetru.com/science/technology/soul.php