Monday, June 30, 2008

இன்று முதல் புகை பிடித்தலை கை விடுகிறேன்.



சிகரெட் இழுத்தல் புகையிலை புகை பிடித்தலில் முதன்மை வகிக்கிறது.

 புகை பிடித்தல் என்பது காய்ந்த புகையிலையை ஒரு சுருட்டு வடிவத்தில்(சிகரெட்) திணித்து அதை சுவாச குழாயினுள் இழுத்து வெளியிடுவது ஆகும். புகை பிடித்தலுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் மகிழ்ச்சிக்காகவும், நிக்கோட்டின் என்ற போதை பொருளிடம் கொள்ளும் அடிமைத்தனமுமே முக்கிய காரணம் வகிக்கின்றன. இதற்கு சிலர் சமூக அழுத்தத்தையும் காரணமாகக் கூறுவர். ஒரு சில சமூகங்களில் பண்பாட்டு பழக்க வழக்கமாகவே பின்பற்றபடுகிறது. உலக சுகாதார மையம்(WHO) அளித்த தகவலின்படி உலகில் உள்ள மூன்றில் ஒரு பங்கு ஆண்கள் புகை பிடிப்பதாக தெரிவித்திருக்கிறது. உலகில் உள்ள புகைபிடிப்போரின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதியினர் கீழக்காணும் பத்து நாடுகளில் வசிக்கின்றனர். அவை முறையே சீனா, இந்தியா, இந்தோனேசியா, ருசியா, அமெரிக்கா, சப்பான், வங்காளதேசம், பிரேசில், செர்மனி மற்றும் துருக்கி(இதில் ஒன்றும் வியப்பதற்கு அல்ல ஏனென்றால் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்நாடுகளியே வசிக்கின்றனர்)

 

   அமெரிக்க பழங்குடியினரின்(வட-தென் அமெரிக்க முழுவதிலும்) புகை பழக்கம் கிமு.2000 ஆண்டுகளாம். கிருஸ்டோபர் கொலம்பஸ் என்பாருடைய கப்பலில் அவருடன் பயணம் செய்தவர்கள்தான் ஐரோப்பாவிற்கு புகைபிடித்தலை மறுஅறிமுகம் செய்து வைத்தனராம். புகை பிடித்தல் ஸ்பெயினில் நிலை கொண்ட பிறகுதான் உலகம் முழுமைக்கும் வணிகத்தின்  மூலமாக அறிமுகச் செய்யபட்ட்தாம். புகையிலை வட கண்டங்களில் கிமு.6000ம் முதலாகவே வளர்ந்து வந்தனவாம்.

              புகையிலையில் நிக்கோட்டின்(Nicotine) மற்றும் ஹார்மேன்(Harman) . இவை இரண்டும் ஒருவனை புகையிலைக்கு அடிமையாக்குகின்றன. முதல்முறை புகையிலை பயன்படுத்துபவருக்கும், அல்லது எப்பொழுதாவது பயன்படுத்துவோருக்கும் புகையிலுள்ள நிக்கோட்டின் என்னும் பொருள் கொஞ்சம் உற்சாகமாக இருப்பது போன்ற, நினைவாற்றல் கூடியதை போன்ற உணர்வை அளிக்குமாம். அதோடு நிக்கோட்டின் செரிமானத்தையும், பசியையும் குறைத்திடுமாம்.(ஏனென்றால் நிக்கோட்டின் சிறிய இடைவேளைக்கு குருதியின் சர்க்கரை அளவை கூட்டுமாம்).

               மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி புகை பிடிப்பது, கான்சர்(Cancer), நுரையீரல் மற்றும் இருதயம் தொடர்பான நோய்களுக்கும் வித்திடுமாம். உலக சுகாதார நிறுவனத்தின் தகவலின்படி 20ஆம் நூற்றாண்டில் மட்டும் 100 மில்லியன் மனிதர்களின் உயிர்களை பலி கொண்ட்தாம், அதேபோல இந்த வழக்கம் தொடருமானால் 21ஆம் நூற்றாண்டில் 1 பில்லியன் மக்களின் உயிர்களை பலி வாங்குமாம் இந்த புகை பழக்கம். என்றும் எச்சரித்துள்ளது.

                அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, ஊனம்ற்று பிறத்தல் அதனினும் அரிது, அதிலும் சமூக நோக்கோடு வாழ்தல் மிக மிக அரிது. ஆதலால் எனக்கு கிடைத்த வாழ்வை, நல்ல வாய்ப்பாக கருதி என் அன்பிற்கினியவர்களோடு வாழ, நான் சார்ந்த சமூகத்திற்கு பயனாய் வாழும் நல்-வாய்ப்பை தவறவிடாமல் இருக்க இன்று முதல் புகை பிடித்தலை கை விடுகிறேன்.