Thursday, July 30, 2009

சந்திரயான் அனுப்பிய சூரிய கிரகண ஒளிப்படங்கள்


பெங்களூரு, ஜூலை 29_-உலக அளவில் பரபரப்-பாக பேசப்பட்ட சூரிய கிரகணத்தின் மொத்த ஒளிப்படங்களையும் சந்திரயான் 1 செயற்கைக் கோள், சிறப்பு ஒளிப்படக் கருவிகள் மூலம் படம்-பிடித்து பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்தியாவின் சந்திர-யான் 1 செயற்கைக் கோள், சந்திரனின் சுற்றுப் பாதை-யில் சென்று கொண்டிருக்கிறது. அது ஜூலை 22 ஆம் தேதி-யன்று நிகழ்ந்த சூரிய கிரகணத்தைச் சிறப்பாகப் படம் பிடித்து ஒளிப்-படங்களை அனுப்பி வைத்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ இயக்குநர் சதீஷ் கூறியதாவது:- சூரிய கிரகணத்தின் ஒட்டு மொத்த ஒளிப்படங்-களையும் சந்திரயான் படம் பிடித்து அனுப்பி வைத்துள்ளது. கடந்த 22 ஆம் தேதி நிகழ்ந்த சூரிய கிரகணத்தில், வட கிழக்கு சீனா முதல் வடக்கு ஆஸ்திரேலியா வரை சூரிய நிழல் மறைக்-கப்பட்டிருந்ததை இது படம் பிடித்து அனுப்பி வைத்துள்ளது. மிகவும் நேர்த்தியாக படம் பிடிக்-கப்பட்டுள்ள இந்த ஒளிப்-படங்கள் பல்வேறு ஆய்வுகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இந்த ஒளிப்படங்கள் பெங்களூருவில் உள்ள பைலாலு வானியல் ஆய்வு மய்யத்துக்கு கிடைத்து உள்ளன. இதன் மூலம் சந்தி-ரயான் தனது சுற்றுப் பாதையில் திருப்-தி-கரமாக செயல்பட்டு வருவதையும் உறுதி செய்ய முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி:விடுதலை

Friday, July 24, 2009

இதுதான் தொப்புள் கொடி உறவு