Friday, March 13, 2009

தெரியுமா?

* 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வகை விலங்குகள் உள்ளன.

* ஆயிரம் வகை ஊர்வன உள்ளன.

* 73 ஆயிரம் வகை சிலந்திகள் உள்ளன.

* 3 ஆயிரம் வகை பேன்கள் உள்ளன.

* 20 கோடி சிறுபூச்சிகள், கிருமிகள் உள்ளன.

* குட்டிபோட்டுப் பாலூட்டும் மம்மல் 4600 வகை உள்ளன.

* 9 ஆயிரம் வகைப் பறவைகள் உள்ளன.

* சிவப்பு மூக்கு கொண்ட குலியா எனும் பறவை தென்ஆஃப்பிரிகாவில் உள்ளது. இவை 100 கோடிகளுக்கு மேல் உள்ளனவாம்.

* இந்து மதத்தில் ஈ, எறும்பு முதல் யானை ஈறாக 84 லட்சம் ஜீவராசிகள் என்கிறது கருட புராணம். கடலுக்குள் மட்டுமே 1 கோடி உயிர்கள் உள்ளனவாம்.

* ஈக்களின் ஆயுள் 14 நாள்கள் மட்டுமே.

* நத்தைகளின் முன்பகுதியில் ஆன்டெனாபோல நான்கு நீட்டிக்கொண்டிருக்கும். அந்த உணர்வுறுப்புகளில் நீளமாக இருப்பவை நத்தையின் கண்கள். குட்டையாக இருப்பவை, அதன் இரையை முகர்ந்து அறிந்துகொள்ள உதவும் மூக்கு.

* சுறா மீன்களைஎவ்வித நோயும் தாக்காத வகையில் அதற்கு நோய்த் தடுப்புச் சக்தி உண்டு.

* மீன்களுக்கும், பூச்சிகளுக்கும் கண் இமை கிடையாது; வலிமையான கண் லென்சுகளே, அவற்றின் கண்களைக் காப்பாற்றுகின்றன.

* கோடிக்கணக்கான மரங்கள் உலகம் முழுவதும் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றை நட்டது யார் தெரியுமா? அணில்கள்.

* பழத்தைத் தின்றுவிட்டுக் கொட்டைகளை வருங்கால உணவுக்காகப் புதைத்துவைத்து விட்டு - மறந்துவிட்டன. புதைக்கப்பட்டவை முளைத்துவிட்டன.

0 கருத்துரைகள்: