Friday, March 13, 2009

பெரியதும் சிறியதும்

இன்றைய உலகில் மட்டுமல்ல, இதுவரை உலகில் இருந்த, இருக்கிற உயிர்களிலேயே மிகப் பெரியது நீலத்திமிங்கிலம் 33 மீட்டர் (100 அடிக்குமேல்) நீளம் உள்ள குட்டி போட்டுப் பால்கொடுக்கும் உயிர். புதிதாகப் பிறக்கும் குட்டிகளிலேயே நீலத்திமிங்கிலக் குட்டிதான் பெரிது. திமிங்கிலத்தின் இதயம் சிறிய கார் அளவிலும், நாக்கு யானையின் நீளத்தைப்போலவும் அமைந்துள்ளன. மிகச்சிறிய உயிர் கிட்டி எனும் தாய்லாந்து நாட்டு வவ்வால். 2 கிராம் மட்டுமே எடையுள்ள இது பெரிய தேனீபோல இருக்கும். மிகப்பெரிய பறவை ஆஸ்ட்ரிச் எனும் நெருப்புக்கோழி. இது சுமார் 8 அடி உயரம் (2.7 மீட்டர்) உள்ளது. 160 கிலோ எடையிருக்கிறது. மிகச் சிறிய பறவை, கியூபா நாட்டின் ஹம்மிங் பறவை (வானம்பாடி). இதன் எடை 1.6 கிராம். அதாவது இரண்டு விரல் எடையைவிடக் குறைவு.

1 கருத்துரைகள்:

Several tips said...

Nalla thakaval.