Monday, July 21, 2008

உருகுவே- வை.கலை


  • தென் அமெரிக்காவின் தென் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
  • இதன் தலைநகரம் மாண்டி வீடியோ
  • பரப்பளவு 68,037 சதுரை மைல் (1,76,215 ச.கி.மீ.)
  • 2006 கணக்கெடுப்புப்படி மக்கள் தொகை 34,31,932 பேர்
  • 66 சதவிகிதம் பேர் ரோமன் கத்தோலிக்கர்கள்.
    மொழி - ஸ்பானிஷ்
  • மொத்த மக்கள் தொகை 98 சதவிகிதம் பேர் கல்வியறிவு பெற்றவர்கள்.
    ம் சராசரி வாழ்நாள் 76 ஆண்டுகள்.

அரசு முறை:

  • இது அரசமைப்பைக் கொண்ட குடியரசு நாடாகும்.
  • 1925 ஆகஸ்ட் 25-இல் பிரேசில் நாட்டிலிருந்து விடுதலை பெற்றது.
  • நாட்டின் தலைவராகவும், அரசாங்கத்தின் தலைவராகவும் குடியரசுத் தலைவர் உள்ளார்.
    பொருளாதாரம்
  • இந்நாட்டின் நாணயம் உருக்கு வேயன் பீசோ.
    போக்குவரத்து மற்றும் சேவைகள்:
  • ரயில்வே: 2,073 கி.மீ.
  • சாலைகள்: 77,732 கி.மீ
  • தொலைபேசிகள்: 1 மில்லியன்
  • செல்பேசிகள்: 70,2000 பேர்

வரலாற்று சுவடுகள்

  • 1516 ஆம் ஆண்டுக்கு முன் இந்நாட்டில் சாருவா இந்தியர்கள் என்னும் இனத்தவர் அதிகமாக குடியிருந்தனர்.
  • பின்னர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள் குடியேறினர்
  • 1680-இல் போர்ச்சுகீசியர் வந்து குடியேறினர்
  • 1726-ல் ஸ்பானியர்கள் போர்ச்சுகீசிய குடியேற்றத்தை வீழ்த்தி மான்டி வீடியோவை உருவாக்கினர்.
  • 1811 ஸ்பெயினிடமிருந்து போர்ச்சுகீசியர் கைப்பற்றி பிரேசிலுடன் இணைத்தனர்.
  • 1825 இல் பிரேசிலுக்கு எதிராக கிளர்ச்சி எழுந்து 1928-ல் விடுதலை பெற்றது.
  • இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்ட கச்சா பொருள்களின் தேவையால் உருகுவே பொருளாதாரத்தில் பெரிய

வெற்றிப் பெற்றது.

  • 1951 குடியரசு தலைவர் பதவி ஒழிக்கப்பட்டு நிருவாக மய்யம் உருவானது.
  • 1966-இல் புதிய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு மீண்டும் குடியரசுத் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது.
  • 1975-இல் இராணுவப் புரட்சி ஏற்பட்டது
  • 1986-இல் மீண்டும் மக்களாட்சி உருவாக்கப்பட்டது.
  • 1990 முதல் பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டது.

இந்நாட்டின் முக்கிய பொருளாதாரங்கள்

  • சுற்றுலா, மீன்பிடி தொழில், துணி உற்பத்தி, வேதிப் பொருட்கள் உற்பத்தி போன்றவை முக்கியத் தொழில்களாகும்.
  • நாட்டின் அய்ந்தில் நான்கு பங்கு மேய்ச்சல் நிலமாக உள்ளதால் ஆடு, மாடு போன்ற கால் நடைகளிலிருந்து கிடைக்கும் மாமிசம், தோல் மற்றும் பால் போன்றவை முக்கிய வருவாய்களாகும்.
  • முக்கிய உணவுப் பண்டங்கள் - கோதுமை, ஓட்ஸ், சோளம் மற்றும் பார்லி.

  • http://www.viduthalai.com/periyarpinju/200807/page07.html

0 கருத்துரைகள்: