Monday, July 21, 2008

உக்ரைன்- வை.கலை

உக்ரைன் நாடு அய்ரோப்பா கண்டத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகர் கீவ்.

இந்நாட்டின் பரப்பளவு 6,03,100 சதுர கிலோ மீட்டர்.

போலந்து, ரோமானியா, ரஷ்யா ஆகிய நாடுகளையும், கருங்கடலையும், எல்லைகளாகக் கொண்டுள்ளது.

இது சமவெளிகளையும், கார்பாத்திய மலைத் தொடர்களையும் முக்கிய இயற்கையமைப்புகளாகக் கொண்டுள்ளது.

பக், நீப்பர், டெனட்ஸ், நீஸ்ட்டர் ஆகியவை இந்நாட்டின் முக்கிய ஆறுகளாகும்.

குளிர்கால கோதுமை மற்றும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆகியவை இந்நாட்டில் அதிகம் விளையும் வேளாண் பொருள்களாகும்.

இரும்புத்தாது நிலக்கரி, மாங்கனீசு, இயற்கை எரிவாயு, எண்ணெய்ப் பொருட்கள், உப்பு, கந்தகம், கிராபைட், நிக்கல், பாதரசம் ஆகியவை இங்கு கிடைக்கும் முக்கிய உலோகத் தாதுப் பொருட்கள்.

மக்கள் தொகை:
2006 ஜூலை கணக்கெடுப்பின்படி இந்நாட்டு மக்கள் தொகை 4,67,10,816 பேர்.

கல்வியறிவு: 99.7 சதவிகிதம் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

உக்ரைனிய மொழி அலுவலக மொழியாக உள்ளது. ஆனால் ரஷ்ய, ருமேனிய, போலிஷ் மற்றும் ஹங்கேரி மொழிகள் பேசப்படுகின்றன.

கிறித்துவம், இஸ்லாம், யூதம் ஆகிய மதங்கள் பின்பற்றப்படுகின்றன.

பொருளாதாரம்:
ரிவ்ணியா என்பது உக்ரைன் நாட்டின் நாணயமாகும்.
இந்நாட்டில் 29 விழுக்காடு மக்கள் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர்.
சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் கணக்கெடுப்பின்படி 9 விழுக்காட்டினர் வேலை வாய்ப்பற்றவர்கள்.

சேவைகள்:
இந்நாட்டில் 22,473 கி. மீட்டர் நீள இருப்புப் பாதைகளும் 1,69,679 கி.மீ. சாலைகளும் உள்ளன.
1,08,33,300 தொலைப் பேசிகள் இயங்குகின்றன.
சுமார் 50 லட்சம் பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர்.
3.8 மில்லியன் பேர் இணைய தள வசதிகளைப் பயன்படுத்துகின்றனர்.

அரசு முறை:
இது ஒரு குடியரசு நாடாகும். குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவராகவும், பிரதம அமைச்சர் அரசின் தலைவராகவும் உள்ளன.
ஆகஸ்ட் - 24 சுதந்திர தினமாகக் கொண்டாடப்படுகிறது. (1991இல் சோவியத் யூனியனிலிருந்து விடுதலை பெற்றது).
தற்போதைய குடியரசுத் தலைவர் விக்டர் யூச்சென்கோ.
- தற்போதைய பிரதமர் யூரி யெகன்னுரோவ்.

வரலாற்றுச் சுவடுகள்:
-கி.மு. ஆயிரம் ஆண்டுகளில் இந்நாடு, சுமேரியர்கள் மற்றும் சைதியான் இனத்தவர்களால் படையெடுக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.
-கி.பி. ஆயிரம் ஆண்டுகள் வரை ஹூணர்கள், பல்கர்கள் கசார்கர்கள் ஆகியோரால் ஆளப்பட்டது.
-நான்காம் நூற்றாண்டில் ஸ்லோவிக் பழங்குடியினர் குடியேறினர்.
-1240இல் மங்கோலியர்களால் கைப்பற்றப்பட்டது.
-பின்னர் போலந்து நாட்டின் கட்டுப்பாட்டில் வந்தது.
-18ஆம் நூற்றாண்டில் இரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
-1918இல் ரஷ்யாவிடமிருந்து விடுதலை பெற்று மீண்டும் 1919இல் இரஷ்யாவால் கைப்பற்றப் பட்டது.
-1923இல் சோசலிஸ்ட் குடியரசானது.
-1986இல் செர்னோபில் என்னுமிடத்தில் பெரிய அணுஉலை விபத்து நடந்தது.
-1991இல் சுதந்திரம் பெற்றது.


http://www.viduthalai.com/periyarpinju/200806/page09.html

0 கருத்துரைகள்: