Tuesday, September 2, 2008

'ஹெட்ஃபோனால் இதயநோய் ஏற்படும்

பொதுவாக தற்போது நாம் சாலைகளில் பல பேர் அவர்களாகவே பேசிக் கொண்டு செல்வதைப் பார்க்கிறோம். விவரம் புரியாத கிராமத்தினர் இந்தக் காட்சியைப் பார்க்கும்போது, பாவம். பார்த்தா நல்ல அழகா இருக்காங்க. என்ன வியாதியோ, தன்னாலேயே பேசிக் கொண்டு செல்கிறார்கள் என்று நினைப்பார்கள்.

காதில் மாட்டிக்கொள்ளக் கூடிய போனை வைத்துக் கொண்டு, யாரிடமாவது பேசிக் கொண்டோ அல்லது எஃப்.எம். வானொலியில் ஏதாவது இசையை ரசித்துக் கொண்டோ நடந்து செல்வது தற்போது, பெரும்பாலானோருக்கு, குறிப்பாக இளம் பெண்களுக்கு ஃபேஷனாகி விட்டது.

ஆனால், இந்த ஹெட் ஃபோனால் என்னவெல்லாம் ஆபத்து இருக்கிறது என்பதை அவர்கள் அறிவார்களா? அதிக டெசிபல் அல்லது நிறுத்தாமல் பாடிக் கொண்டிருக்கும் ரேடியோ அதிர்வலைகளால் காது நரம்புகளுக்கு நல்லதல்ல என்று டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் காது கேட்கும் திறன் மெதுவாகப் பாதிக்கப்படக் கூடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

காதில் போனை மாட்டிச் செல்லும் இந்தப் பழக்கத்தால் அதிக டென்ஷன் ஏற்படுவதுடன் இதய நோய் உருவாகக்கூடும் என்றும் டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒலி அலைகளை உருவாக்கக்கூடிய உட்புற காதில் அடங்கிய ஸ்பைரல் கேவிட்டியான கோச்லியா ஹெட்ஃபோன் ஒலியை தாங்கக்கூடியதாகும். இந்த கோச்லியாவிற்கு பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் காது கேட்கும் திறன் பாதிக்கப்படும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.

கால் சென்டர்களில் பணியாற்றும் ஏராளமான ஊழியர்கள் தங்களின் கேட்கும் திறனில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக டாக்டர்களை அணுகுவதாகவும், இதன்மூலம் உடல் ஆரோக்கியமும் பாதிப்புக்குள்ளாவதாகவும் தெரிய வந்துள்ளது.

ஹெட்போனை அதிகளவில் பயன்படுத்துவதால் தூக்கம் கெடுதல், தலைவலி, காதுவலி போன்றவை சாதாரணமாக ஏற்படும் என்றும் தெரிய வந்துள்ளது

http://files.periyar.org.in/viduthalai/20080901/news19.html

0 கருத்துரைகள்: