Tuesday, September 2, 2008

சாதிக்காயின் மருத்துவக் குணங்கள்

சாதிக்காய் என்பதற்கு குலக்காய், ஜாதிக்காய் அட் டம், அட்டிகம் என்கின்ற வேறு பெயர்கள் இருக் கின்றன. சாதிக்காய்க்கு தாவ ரவியல் வழங்கும் பெயர் மைரிஸ்டிகா அஃபியனா லிஸ் அல்லது மைரிஸ்டிகா ஃப்ராக்ரன்ஸ் எனப்படும். இது ஒரு மர இனத்தை சேர்ந் தது. சாதிக்காய் பழத்தில் கொட்டையின் ஓட்டி னுள்ளே இருக்கும் பருப்பு தான் சாதிக்காய் என்று உபயோகிக்கப்படுகிறது. இதனை உணவு தயாரிப்பில் மணமூட்டும் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர். இதன் சுவை : துவர்ப்பு, தன்மை : வெப்பம்.

சாதிக்காய்க்கு சில நோய்களை தவிர்க்கும் இயற் கையான மருத்துவக் குணங் கள் உள்ளன.

சாதிக்காய் உடலை வலிமையாக்கும்.

வாயுவினால் வயிறு உப்பசம், வயிற்று வலி, வயிற் றுப் பொருமல், அசீரண மந்தம், வாந்தி பேதியின் போது அதிக தாகம், ஒற்றைத் தலைவலி, மூச்சு இரைப்பு, இருமல், கண் ஒளி மங்கல், தூக்கமின்மை.

பெண்களுக்கு : மாத விலக்கின் போது வயிற்று வலி. அதிக உதிரப்போக்கு.

ஆண்களுக்கு : விந்துக் குறைவை போக்குகிறது.

சாதிக்காய் எண் ணெய்(தைலம்), பல்வலி, வாத நோய் ஆகியவைகளுக்கு வெளி உபயோகத்திற்கு பயன்படுகிறது.

ஹோமியோபதி எனும் ஜெர்மனி மருத்துவத்தில் சாதிக்காயிலிருந்து வீரியப் படுத்தி (பொடன்சி) தயாரிக் கப்பட்ட மருந்தின் பெயர் நக்ஸ்மாஸ்சாடா எனப்படும் இம்மருந்து சில மன நோய்க் குறிகளுக்கும் சில நோய்களை குணப்படுத்த பயன்பட்டு வருகிறது.

மனக்குறிகள் : தோல்வியான சம்பவங்களாலும் அல்லது வேறு காரணங்களாலும் அதிக மன வேதனையால் மன நிலை பாதிப்பு (லிபோதை மியா).

நினைவாற்றல் குறை பாட்டிற்கு இரண்டு காரணங் கள் இருக்கின்றன.

1. புரதம், மாவு சர்க்கரைப் பொருள் அடங்கிய க்ளைகோ ப்ரோட்டீன் என்னும் சத்துப் பொருள் மூளையில் குறைந்து இருப்பது. அதாவது, இந்தச் சத்துப் பொருள் மூளையின் வெளிப்பகுதியில் (செரிப்ரல் கார்டெக்ஸ்), நரம்பு செல் களிலும் (நியூரான்), நரம்புகளிலும் நினைவுகளை அனுப்புவதில் ஊக்கமுடன் செயல்படச் செய்கிறது.

2. மூளையில் (தலைமிதழ்), ஒரு நரம்பிலிருந்து மற்றொரு நரம்பிற்கு (ஆக்ஸான், டென்ட்ரான்) தகவல்கள் கடந்து செல்லும்போது (டிரான்ஸ்மிஷன்), இரண்டு நரம்புகளும் இணையும் இடத்தில் (சைனாப்ஸ்) நினைவுகளின் உணர்ச்சி வேகம் (இம்பல்ஸ்) தாமத மாக செயல்படுவதால் ஞாப கம் உடனே வருவதில்லை.

விபத்தினாலும் அல்லது சில மருந்து வகைகள் சாப்பிட்டதாலும், கண்களில் கருவிழிக்கு (அய்ரிஸ்) நடுவில் இருக்கும் கண்மணி (பியூபில்) என்னும் உறுப்பு, அதிக அளவில் விரிந்திருக்கும் கண் நோய், கண்மணியில் செயல் படும் தசைகள் (ஸ்பிங்டர் மஸில்) பாதிப்பினால் ஏற்படு கிறது. மேற்கண்ட இரண்டு பாதிப்புகளுக்கும் (ஞாபக மறதி, கண் நோய்) நக்ஸ் மாஸ்சாடா என்னும் மருந்து செயல்படுகிறது.

பெண்களுக்கு: சீரற்ற காலத்தில் கொஞ்சமாகவும், அதிகமாகவும் மாறுதலாக வெளியாகும் மாதவிடாய்ப் போக்கு, நீடித்திருக்கும் மாத விடாய் (மெனோஸ்டேக் ஸிஸ்) மாதவிடாய் வராத காலத்திலும் கருப்பையில் உதிரப்போக்கு, இரத்தமுடன் வெள்ளைப்படுதல் (லியு கோரியா).

இதர நோய்க்குறிகள் :

வாத நோயில், வலது இடுப்பிலிருந்து, வலது முழங்கால் மூட்டு வரை வலி, குறிப்பாக மாடியில் ஏறும் போது அதிக வலி, அசைவு களால் வலி அதிகம், நடப்ப தற்கு தடுமாறுதல் (ஸ்டேகர்).

தொண்டை வறட்சி, வயிற் றில் அதிகக் காற்று சேர்ந்து வயிறு உப்புசமாகவும், அசீர ணக் கோளாறும் (டிஸ் பெப்சியா) இருக்கும்.

தூக்கமின்மையால் சில நோய் பாதிப்புகள், தூங்கிய வாறு சோம்பி இருத்தல், உணர்வற்ற நிலையில் (கோமா/ஸ்டூபர்) இருத்தல்.

http://files.periyar.org.in/viduthalai/20080901/news18.html

0 கருத்துரைகள்: